(துறையூர் தாஸன் , எஸ்.ராஜு )
கிழக்கு மாகாண மட்ட தமிழ் மொழித் தினப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு, அக்கரைப்பற்று இராம கிருஷ்ணா தேசிய பாடசாலையில் நேற்று (07) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் சான் விஜயலால் டி சில்வா, மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், திருக்கோவில் தவிசாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பாரம்பரிய கலை ஆற்றுகைகளுக்கு மத்தியில் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மாகாண கல்விப் பணிப்பாளரின் தலைமையுரை இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஆக்கம் எழுதுதல், கட்டுரை வரைதல், இலக்கியம் நயத்தல், திறனாய்வு, குறுநாட ஆக்கம், கவிதை, சிறுகதையாக்கம், பேச்சு, தனி நடனம், பாவோதல், இலக்கணப் போட்டி, தமிழறிவு வினா விடை, தனி இசை, நாட்டார் பாடல், ஆக்கத்திறன் வெளிப்பாடு, விவாதம், முஸ்லிம் நிகழ்ச்சி, இசையும் அசைவும், இலக்கிய நாடகம், குழு இசை, வாசிப்பு, நாட்டிய நாடகம், அறிவிப்பு, வில்லுப்பாட்டு உட்பட பல்வேறு போட்டிகளிலே முதல் இடத்தினை பெற்ற மாணவர்கள் ஆளுனரால் பதக்கம் அணிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.
மாவட்ட மட்டம் மற்றும் வலய மட்டம் ஆகியவற்றில் முதல் மூன்று இடங்களையும் தனதாக்கிய வலயங்களின் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் வெற்றிக் கேடயம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் கிழக்கு மாகாண ஆளுநர் சான் விஜயலால் டி சில்வா, ஏற்பாட்டுக் குழுவினரால் பொன்னாடை போர்த்திக் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.