அம்பிளாந்துறையில் 22 மில்லியன் செலவில் கலாசார மண்டபம்




பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவின் அம்பிளாந்துறையில் கலாசார மண்டபம் தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் இருபத்தி இரண்டு மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சரின் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கான இணைப்பாளர் கே.கோபிநாத் இன்று தெரிவித்தார்.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவின் அம்பிளாந்துறை மற்றும் அதனை அண்டிய கிராம மக்களின் நன்மை கருதி அமைச்சர் மனோகணேசனிடம் தன்னால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் கலாசார மண்டபம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் முதல் கட்டமாக 2018ம் ஆண்டு பத்து மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்டமாக 2019ம் ஆண்டு பன்னிரண்டு மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இணைப்பாளர் கே.கோபிநாத் தெரிவித்தார்.

அத்தோடு மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சரினால் எனது ஆலோசனைக்கு அமைவாக பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சரின் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி திட்டங்களின் இணைப்பாளர் கே.கோபிநாத் மேலும் தெரிவித்தார்.