தமிழ் மக்களின் முழுமையான ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சி நிரந்தர பலமான ஒரு தலைமைத்துவத்தினை உருவாக்கி, அதனூடாக ஜனநாயக மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ராஜித மேலும் கூறியுள்ளதாவது, “ஜனநாயக தேசிய முன்னணிக்கான யாப்பை உருவாக்கும் பணிகள் முழுமையடைந்துள்ளன.
ஜனநாயக தேசியக்கூட்டணி கைச்சாத்திடப்படும் போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.
புதிய அரசியல் பயணத்தை நோக்கிய கொள்கை திட்டம் உருவாக்கப்பட வேண்டிய தேவை காணப்படுப்படுகிறது.
கொள்கைத் திட்டம் உருவாக்கலில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் பரிந்துரைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
வீதிகளில் கோஷம் எழுப்பி ஜனாதிபதி வேட்பாளர்களைத் தெரிவு செய்ய முடியாது.
கட்சியின் கொள்கைகளுக்கு அப்பால் சென்று செயற்படுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டு தேர்தல் பிரசார மேடைகளில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக மறந்து விட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்ப உறுப்பினரை களமிறக்கியதைப் போன்று குடும்ப உறுப்பினரைக் களமிறக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவைத் தோல்வியடையச் செய்யும் சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் தகுந்த பதிலடி வழங்கப்படும்.
தமிழ் மக்களின் முழுமையான ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சி நிரந்தர பலமான ஒரு தலைமைத்துவத்தினை முதலில் உருவாக்கி அதனூடாக ஜனநாயக மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.