கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி ஒன்று உருவானால், அதில் எந்தவொரு பொறுப்பையும் வகிக்க போவது இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (23) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.
கேள்வி : தற்போது என்ன நடக்கின்றது?
குமார வெல்கம : எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நல்லது நடக்கும்.
கேள்வி : அது யார் என்று சொல்ல முடியாதா?
குமார வெல்கம : பொறுத்திருந்து பார்ப்போம். நான் ஒரு துண்டையும் மேலங்கியையும் அணிய போகும் நபரை பற்றி சொன்னேன்.













