மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின்போது பாரம்பரிய மனம் கவர்ந்த மட்பாண்ட காட்சிக் கூடங்கள்



(ரவிப்ரியா)

நடைபெற்று முடிந்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது ஆலய வீதியில் அதிகளவு அமைக்கப்பட்ட விற்பனை காட்சிக் கூடங்களில் பாரம்பரிய மற்றும் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய மட்பாண்ட காட்சிக் கூடங்கள் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக சமையலறைகளில் அலுமேனிய மற்றும் சில்வர் பாத்திரங்களின் ஆதிக்கம் நிலவி வரும் நிலையில் அவற்றுக்கு நிகராக நவீன தொழில் நட்பத்திற்கும் பாவனைக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்ட சகலவிதமான சமயலறை மற்றும் பாரம்பரிய மட்பாண்டங்களும் பழமைக்கு திரும்பம் ஒரு விழிப்பணர்வை ஏற்படுத்தவதாக இருந்தது,

மட்பாண்டங்களில் சமைக்கப்படும் உணவுகள் நீண்ட நேரத்திற்கு பழுதடையாமல் இருப்பதும் விசேட அம்சமாகும். விலைகளும் பெரிதாக இல்லை. அலுமேனிய பாத்திரங்களில் காணப்படும் நச்சுத் தன்மையற்ற சுகாதாரத்திற்குரிய உணவுக்கு தனிச் சுவை அளிக்கக கூடிய சட்டி பானைகளில் சமைப்பதற்கு குடும்பத் தலைவிகள் முன்வருவார்களா? தற்போது காணப்படும் பல்வேறுபட்ட  நோய்களுக்கு பாவிக்கப்படும் மட்பாண்டம் தவிர்ந்த சமையலறை பாத்திரங்களும் ஒரு காரணமென சுகாதாரத் துறையினர் தெரிவிப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.