உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று (01) மீண்டும் ஒன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று பகல் வேளையிலேயே பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் ஒன்று கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது பயங்கரவாத தடுப்பு பிரிவின் பதில் பணிப்பாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜகத் நிஷாந்த சாட்சியங்களை வழங்கவுள்ளார்.
இந்நிலையில் இராணுவத் தளபதி லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன ஆகியோர் நேற்று தமது சாட்சியங்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.













