சமூக விஞ்ஞானப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்த பொத்துவில் மாணவி

(சுரே )
பொத்துவில் மெதடிஸ் தமிழ் மகா வித்தியாலய மாணவி கா.லதுக்ஷிக் சலோனியா, தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்று வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட போட்டியின் பெறுபேறுகள்  திருக்கோவில் கல்வி வலயத்தினால் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிந்தது.

இதன்படி, திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன், நேற்று வெள்ளிக்கிழமை திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தில் மாணவி கா.லதுக்ஷிக் சலோனியாவிற்கு தங்கப் பதக்கத்தினை அணிவித்து பாராட்டி கௌரவித்து, சான்றிதழ்களையும் வைபவ ரீதியாக வழங்கி வைத்திருந்தார்.

குறித்த மாணவி பாடசாலையில் பல்வேறு போட்டிகளிலும் பல சாதனைகளை செய்துள்ளதுடன் 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் 183 புள்ளிகளை பெற்று வரலாற்று சாதனையைய படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது  வலயக் கல்வி அலுவலக பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன், பிரதி  கல்விப் பணிப்பாளர்கள்  கலந்துகொண்டனர்.