வானிலை மாற்றத்திற்கு ஏற்ப பயிர்களை வளர்க்க வேண்டும்



வானிலை மாற்றத்திற்கு ஏற்ப பயிர் வளர்ப்பையும் மாற்ற வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

வறட்சி காலத்திற்கு ஏற்ற விதத்தில் பயிர்களை பயிரிட வேண்டிய அவசியம் உள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

அனுராதபுரம் பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.