(செ.துஜியந்தன்)
பாண்டிருப்புக் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியை திருமதி ஜெயந்தி குணராசா தனது 27 ஆண்டு கால ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார்.
இவர் ஓய்வுபெறும் போது நற்பிட்டிமுனை சிவசக்தி மகாவித்தியாலயத்தில் ஆசிரியையாக சேவையாற்றியுள்ளார். தனது ஆரம்பக்கல்வியை பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் கற்றவர். 1992 இல் ஆசிரியர் சேவைக்குள் உள் நுழைந்தார். தனது முதல் நியமனத்தை பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் பெற்றக்கொண்டவர் பின்பு பாண்டிருப்பு மகா வித்தியாலயத்திலும் சேவையாற்றியுள்ளார்.
தற்போது நற்பிட்டிமுனை சிவசக்தி மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாக சேவையாற்றியவர் தனது 55ஆவது வயதில் இப்பணியில் இருந்து ஓய்வுபெற்றுச் சென்றுள்ளார். தொடர்சியாக 27 ஆண்டுகாலம் சிறப்பான கல்விப் பணியாற்றிய ஆசிரியை திருமதி ஜெயந்தி குணராசா கிராம மக்களினதும், பல மாணவர்களினதும் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றவர்.
இரு பிள்ளைகளின் தயான இவர். கொழும்பு லேக்ஹவுஸ் தினகரன் பத்திரிகையின் தினகரன் பிரதம ஆசிரியர் க.குணராசாவின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.















