ஐ.தே.க இதுவரை ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்காமையால் மக்களுக்கு அநீதி இழைப்பு




ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி இதுவரையில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமையின் மூலம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

தற்போது கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகள் தொடர்பில் சகல கட்சிகளினது ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.