
பிரித்தானியாவிலிருந்து இயங்கும் Friends of Batticaloa Hospital அமைப்பினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கழிவகற்றல் செயற்பாடுகளுக்காக பிளாஸ்டிக் மற்றும் ஊசி அரைக்கும் (Crusher) இயந்திரமொன்று இன்று (12.09.2019) அன்பளிப்பு செய்யப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் கழிவகற்றல் பிரச்சனைகள் தொடர்பிலும், அதனால் நோயாளிகள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்களால் பிரித்தானியாவிலிருந்து இயங்கும் Friends of Batticaloa Hospital அமைப்பிற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மேற்படி இயந்திரமானது அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான குறித்த பிளாஸ்டிக் மற்றும் ஊசி அரைக்கும் (Crusher) இயந்திரத்தினை மாநகர முதல்வர் தி.சரவணபவன் மற்றும் ஆணையாளர் க.சித்திரவேல் ஆகியோரால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் உள்ளிட்ட நிர்வாகத்தினரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.











.jpg)
.jpeg)
