(NR, எஸ்.கார்த்திகேசு)
தம்பிலுவில் எதிரொளி மெகா நைட் கிரிகெட் சுற்றுப் போட்டியில் திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தினர் சம்பியனாக வெற்றிப் வாகை சூடிக் கொண்டனர்.
தம்பிலுவில் எதிரொளி மெகா நைட் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் கடந்த புதன்கிழமை 2019.09.18 இரவு ஆரம்பமாகி இருந்ததுடன் இச்சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 44 கழகங்கள் பங்குபற்றி இருந்தன.
இவ் சுற்றுப் போட்களில் இருந்து இறுதிச் சுற்றுக்கு திருக்கோவில் உதயசூரியன் மற்றும் விநாயகபுரம் விநாயகர் கழகமும் தெரிவாகி இருந்தன.
இவ் சுற்றுப் போட்டிகள் தம்பிலுவில் எதிரொளி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் கு.நவச்சந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை 2019.09.22 இரவு இடம்பெற்று இருந்தன.
இறுதி சுற்றுத் தொடரில் முதலில் விநாயகர் கழகம் துடுப்பெடுத்து ஆடியதுடன் ஜந்து ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 29 ஓட்டங்களை பெற்று இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து 30 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டு கழகத்தினர் துடுப்பெடுத்து ஆடினர். தொடரின் ஆரம்பத்தில் விநாயகர் அணி வீரர்களின் பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு என்பன உதயசூரியன் அணிக்கு சவாலாக அமைந்த போதும் உதயசூரியன் அணியின் இறுதி வரிசை உறுப்பினர்களின் சாதுரியமாக விளையாட்டும் விநாயகர் அணியினரின் தடுமாற்றமும் உதயசூரியன் கழகத்தினரின் வெற்றி இலக்கை நோக்கி இட்டுச் சென்றிருந்தன.
இறுதியில் 4.1 ஓவர் முடிவில் நான்கு விக்கெட்டக்களை இழந்து 30 ஒட்டங்களை பெற்று வெற்றி பெற்றதுடன் எதிரொளி மெகா நைட் வெற்றிக் கிண்ணத்தையும் 30ஆயிரம் ரூபா பணப் பரிசையும் பெற்றதுடன் விநாயகபுரம் விநாயகர் கழகம் ரணசப் கிண்ணத்தையும் 15ஆயிரம் ரூபா பணப்பரிசையும் வெற்றி கொண்டு இருந்தனர்.
தம்பிலுவில் எதிரொளி மெகா நைட் கிரிகெட் இறுதிச் சுற்றுப் போட்டி மற்றும் பார்வையார் அரங்கு திறப்ப விழா நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், கௌரவ அதிதியாக திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் ஆர்.டபிள்யு. கமலராஜன், கிராம நிருவாக உத்தியோகத்தர் கண.இராசரெத்தினம் ஆகியோர் கலந்த கொண்டு வெற்றிப் பெற்ற கழகங்களுக்கான வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் பணப் பரிசில்கள் வழங்கி வைத்த அதேவேளை தம்பிலுவில் எதிரொளி விளையாட்டு கழகத்தின் பார்வையாளர் அரங்கினையும் திறந்து வைத்திருந்தனர்.
நிகழ்வில் மேலும் அரச அதிகாரிகள் விளையாட்டு கழகங்களின் வீரர்கள் பொது மக்கள் என பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியானது Battinews ஊடக அனுசரணையில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது
இப்போட்டியானது Battinews ஊடக அனுசரணையில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது














































