பாவோதல் போட்டி பரிசளிப்பு வைபவம்





மட்டக்களப்பு சின்ன ஊறணி மாவடிப்பிள்ளையார் ஆலய கல்வி மற்றும் கலாச்;சார அபிவிருத்தி ஒன்றியத்தால் (மெக்டாஆநுஊனுயு) பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக நவராத்திரி விழாவை முன்னிட்டு பாவோதல் போட்டி 12.10.2019  அன்று நடாத்தப்பட்டது.

அதற்கான பரிசளிப்பு வைபவம் 13.10.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆலயத்தில் நடைபெற்றது.இதற்கு பிரதம அதிதியாக மட். ஊறணி சரஸ்வதி வித்தியாலய பாடசாலை அதிபர் திரு.மயில்வாகனம் யோகானந்தராஜா அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். இவ்வாறான நிகழ்வை நடாத்துவதற்கு ஒன்றிணைந்த கிராமத்து இளைஞர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

அத்துடன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அத்தோடு கிராமத்தில் வசிக்கும் ஏழை மாணவர்களுக்கு அவர்களுக்கு தேவையான காலணிகள் பாடசாலைப்பைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

 (மெக்டாஆநுஊனுயு)அமைப்பின் ஸ்தாபகர்களான திரு.தில்லைநாயகம் தனுசன் மற்றும் திரு.சண்முகமூர்த்தி சதீஸ் அவர்களினால் இவ் அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் அதன் எதிர்கால திட்டமிடல்கள் பற்றிய விளக்கங்கள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
மெக்டா அமைப்பானது மதம் சார்பாக அல்லாமல் கிராமங்களில் வசிக்கும் அனைத்து மாணவர்களின் கல்வி, கலை, கலாச்சாரம் மற்றும் திறன் அபிவிருத்தி சார்ந்த அனைத்து விடயங்களையும் முன்னெடுக்கும் என மெக்டா அமைப்பினர் தெரிவித்திருந்தனர். இதற்கான பூரண ஒத்துழைப்புக்களை ஸ்ரீ மாவடிப்பிள்ளையார் ஆலய நிர்வாகம் வழங்குவதாக உறுதியளித்தனர்.

இவ்வாறான நிகழ்வினை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு மெக்டா அமைப்பினருடன் இளைஞர்கள்இ சமூக நலன் விரும்பிகளும் இணைந்து கொள்ளுமாறு மெக்டா அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர்.