மட்டக்களப்பு மாநகரசபையினால் நடாத்தப்படுகின்ற தையல் பயிற்சி நிலையத்திற்குப் பயிற்சியாளர்களை சேர்த்துகொள்ளல்

மட்டக்களப்பு மாநகரசபையினால் பெண்கள் சுயதொழிலில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு தையல் பயிற்சி வகுப்பு நடாத்தப்பட்டு வருகின்றது.

மேற்படி பயிற்சிக்காகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கீழ்க்காணும் நிபந்தனைகளுக்கமைய பதிவுத்தபால் மூலம் எதிர்வரும் 23.12.2019 ஆம் திகதிக்கு முன்னர் 'மாநகர ஆணையாளர், மாநகர சபை, மட்டக்களப்பு' என முகவரியிட்டு அனுப்பிவைக்கப்படல் வேண்டும். விண்ணப்பங்கள் அடங்கிய கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் 'தையல் பயிற்சி வகுப்பிற்கான ஆட்சேர்ப்பு' எனக் குறிப்பிடுதல் வேண்டும்.

தேர்வு

பயிற்சியாளர்கள் நேர்முகப்பரிட்சை மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்.

தகைமைகள்

பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
க.பொ.த.(சா/த) படித்திருத்தல் வேண்டும்.
35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் நிரந்தர வதிவிடத்தைக் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

பயிற்சிக்குரிய நிபந்தனைகள்

பயிற்சிக்காலம் 06 மாதங்களைக் கொண்டதாக இருக்கும்.
அனுமதிக்கட்டணம் ரூ.100.00 மட்டும்
மாதாந்தக்கட்டணம் ரூ.50.00 மட்டும் 
பயிற்சி முடிவில் நடாத்தப்படும் பரீட்சையில் சித்தியடைபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்
பயிற்சி வகுப்பு வாரத்தில் 05 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு வகுப்பும் 02 மணித்தியாலங்களைக் கொண்டிருக்கும்

விண்ணப்பிக்கும் முறை

கீழ்க்காட்டப்பட்ட மாதிரி விண்ணப்பத்திற்கமைய தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மாத்திரம் ஏற்றுக் கொள்ளப்படும்.

தி.சரவணபவன் (JPUM)
மாநகர முதல்வர்
மாநகரசபை, மட்டக்களப்பு.