நிந்தவூரில் கடந்த 1 ஆம் திகதியன்று நிந்தவூர் கமநல கேந்திரமத்திய நிலையத்தில் பணியாற்றும் பெண் ஒருவரிற்கு அவரது தலைமை உத்தியோகத்தரான ஐ.எல்.எ காலிர்க் அறைந்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது . இதையடுத்து தலைமறைவாகியிருந்த குறித்த நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று நாம் (Battinews ) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தோம் , குறித்த நபர் இன்னும் கைது செய்யப்படாத விடயம் தொடர்பாக கேட்டபோது .
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரந்த ஜயலத் தலைமையிலான குழுவினர் குறித்த நபரை கைது செய்வதற்காக தீவிர விசாரணைகளையும்,தேடுதல்களையும் முன்னெடுத்திருந்ததாகவும் . நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .
பின்னர் நேற்றிரவு வெலதெனிய எனும் இடத்திலிருந்து வரவழைக்கப்பட்டு நிந்தவூரில் உள்ள வீடொன்றில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர் .













