அனைத்து பரீட்சைகளுக்குமான விண்ணப்பம் Online மூலம் !

க.பொ.த. சாதாரணதரம், க.பொ.த. உயர்தரம் மற்றும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை இணையவழி மூலம் கோர பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

டிஜிற்றல் மயப்படுத்தலை நோக்காக கொண்டு இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய முறையின் கீழ் தரம் 05புலமைப்பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தனிப்பட்ட இலக்கம் வழங்கப்படும் என்பதோடு, குறித்த இலக்கம் பரீட்சைகள் திணைக்களத்தின் தரவுத்தளத்துடன் (database) இணைக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் மற்றும் இணைப் பாட விதான நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் தொடர்பாக தனிப்பட்ட மாணவர் இலக்கமானது, மாணவர் தரவுத்தளத்துடன் இணைக்கப்படும் என்பதோடு, இதன் மூலம் இலகுவாகமாணவர்களைஅடையாளம் கண்டுகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு க.பொ.த. உயர்தர பாடங்களானகணக்கியல், உயிரியல் தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றுக்கு சிக்கலான கணிப்புகளை மேற்கொள்ளமுடியாத கணிப்பான்கள் (non-programmable calculators) பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்குவது பற்றி கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.