எரிபொருள் விலையை குறைப்பதற்கு பதிலாக பருப்பு விலை மற்றும் மின்சார கட்டணங்களை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளார்.
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை கடந்த 3 மாதங்களில் 50 வீதம் குறைவடைந்துள்ளது. அதன் நிவாரணம் இலங்கை மக்களுக்கு வழங்குமாறு பல தரப்பினரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் எரிபொருளுக்கு பதிலாக பருப்பு விலை மற்றும் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.













