கிளிவெட்டி ஆற்றில் படர்ந்திருக்கும் நீர்த்தாவரங்களை அகற்றுமாறு கோரிக்கை. !

(எப்.முபாரக்)
மூதூர் பிரதேசத்தில் உள்ள கிளிவெட்டி ஆற்றில் படர்ந்து நிலை கொண்டுள்ள நீர்த்தாவரங்கள் குப்பை கூளங்களை அகற்றி சீரான நீரோட்டத்திற்கு வழியேற்படுத்துவதுடன் சிறுபோக நேற்செய்கைக்கு உதவுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நீண்டகாலமாக கிளிவெட்டி ஆறு நீர்த்தாவரங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள், விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர் நேக்கி வருகின்றனர், எனவே இவ் விடயம் தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கிளிவெட்டி ஆற்றை பராமரிக்கும் நிரந்தர வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகின்றது.