2026ஆம் ஆண்டிற்கான சர்வதேச விருதால் உயர்சர்வதேச கற்கை நிறுவகம் கௌரவிப்பு


உயர் சர்வதேச கற்கை நிறுவகத்திற்கு 2026ம் ஆண்டிற்கான சர்வதேச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Business World International Organization - USA நிறுவனத்தினால் 2026ம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (16) Mount Lavinia Hotel கொழும்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது Educational Institution /Services துறையில், உயர் சர்வதேச கற்கை நிறுவகத்திற்கு "Best Educational Workplace of the Year - Platinum Award" விருது வழங்கப்பட்டது.

இவ் விருதினை, கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் Dr. தம்பிநாதபிள்ளை துஷ்யந்தன் மற்றும் கற்கை நிறுவகத்தின் பணிக்குழாம் இணைந்து பெற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது.