கல்லடி புதிய டச்பார் வீதியைச் சேர்ந்த 44 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வாவியில் சம்பவ தினமான இன்றையதினம் காலை 6.30 மணியளவில் வழமைபோல மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் சடலம் ஒன்று சிக்கியதையடுத்து அதனை மீனவர் கரைக்கு இழுத்து வந்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் காத்தான்குடி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.













