காட்டு யானை தாக்கி தந்தையும் மகளும் உயிரிழப்பு!

வில்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகஹஉல்பத பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (15) அதிகாலை காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக வில்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் 25 வயதுடைய மகள் மற்றும் 57 வயதுடைய தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தந்தை தனது மகளை வேலைக்கு அழைத்துச் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வில்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.