காயமடைந்த ஐந்து மாணவர்களும் அதே பாடசாலையில் தொழில்நுட்பப் பிரிவில் 12 ஆம் தரத்தில் கல்வி கற்பவர்கள் எனவும், தாக்குதலை நடத்திய மாணவன் அதே பாடசாலையின் விஞ்ஞானப் பிரிவில் கல்வி பயிலும் 12 ஆம் தர மாணவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலை நடத்திய மாணவருக்கும், காயமடைந்தவர்களில் ஒருவருக்கும் இடையே சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட தகராறே இந்த மோதலுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பழிவாங்கும் நோக்கில் குறித்த மாணவன் மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் ஒருவரைத் தாக்க முயன்றபோது, அதனைத் தடுக்க முற்பட்ட ஏனைய நான்கு மாணவர்களும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த ஐந்து மாணவர்களும் எப்பாவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
தாக்குதல் நடத்திய மாணவனை எப்பாவல பொலிஸார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து எப்பாவலலை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.




.jpg)






.jpeg)
.jpg)
