பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று குறித்த வயல் பகுதியில் உள்ள கொட்டகையை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்ட உள்ளூர் தயாரிப்பான சிறிய ரக துப்பாக்கி ஒன்றை கைப்பற்றியதுடன் சித்தாண்டியைச் சேர்ந்த 41 வயதுடைய விவசாயி ஒருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வெள்ளிக்கிழமை (08) ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


.jpg)

.jpg)







