எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியாகிய புதிய தகவல் !

உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையை அடுத்து அதன் நன்மைகள் தொடர்பில் அரசாங்கம் மாற்று திட்டம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
உலக சந்தையில் எரிபொருட்களின் விலையில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியை அடுத்து  இலங்கையில் எரிபொருட்களின் விலையை குறைக்காமல் அதற்கு பதிலாக அதன் பயன்களை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிடப்போவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வழமையாக உலக சந்தையில் எரிபொருட்களின் விலையில் ஏற்படும் குறைவு பொதுமக்கள் அனைவருக்கு சென்று சேர்வதில்லை.

எனவேதான் இந்த தடவை இந்த நன்மை பாரியளவு மக்களை சென்றடையும் வகையில் இந்த முடிவை மேற்கொண்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.