வலுவூட்டலுக்கான மக்கள் அமைப்பினால் களுவாஞ்சிகுடி சூரியடி கிராமத்தில் வாழுகின்ற 100 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு.


(சித்தா)
வலுவூட்டலுக்கான மக்கள் அமைப்பு அவுஸ்திரேலியா வாழ் தமிழ் உறவுகளின் நிதி பங்களிப்புடன் 1300 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகளை களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட களுவாஞ்சிகுடி சூரியடி கிராமத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு சட்டத்தினால் நாளாந்த கூலி தொழிலினை இழந்து வறுமையில் வாழுகின்ற 100 கும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் இன்று 08.05.2020 வழங்கிவைக்கப்பட்டன

இந்த நிகழ்வில் வலுவூட்டலுக்கான மக்கள் அமைப்பின் தலைவர் செ. ஜேசுசகாயம், களுவாஞ்சிகுடி தெற்கு கிராம சேவக உத்தியோகஸ்தர் வி.துஸ்யந்தன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கே. சந்திரமோகன் மற்றும் வலுவூட்டலுக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர்கள் பங்கு கொண்டு வழங்கி வைத்தனர்