இன்றைய காலகட்டத்தை பொறுத்த வரையில் ஒரு மனிதனது வாழ்விற்கு கல்வியானது இன்றியமையாததொன்றாக மாறிவருகின்றது என்றால் அது மிகையாகாது. இந்த அடிப்படையில் கல்வியானது பல்வேறு வகைகளில் மாணவர்களுக்கு பயனளிக்ககூடியதொன்றாக காணப்பட்டு வருகின்றது.
சிறப்பான கல்வியை வழங்கும் இடங்களில் பாடசாலையானது மிக முக்கிய பங்கினை ஆற்றிவருகின்றது. பாடசாலைகளைப் பொறுத்தவரையில் பல்வேறு செயற்றிட்டங்கள், கற்பித்தல் முறைகள் என்பன காலத்திற்கு காலம் நவீனமயப்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தி வைக்கப்படுகின்றன. இவ்வாறான நவீனமயப்படுத்தலுக்கு இந்த தொழிற்கல்வியும் ஒரு வகையில் காரணம் எனலாம்.
ஒரு மாணவனது இரண்டாவது கற்பித்தல் களமாக காணப்படுகின்ற பாடசாலையிலேயே பல்வேறு அடிப்படையில் தொழிற்கல்வி வழங்கப்பட்டு வருகின்றது. அதாவது தரம் பதினொன்று மாணவர்களுக்கு தொடர்பாடலும் ஊடகவியற்கற்கையும் எனும் பாடமானது 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு பாடசாலையில் கற்பிக்கப்படுகின்றது.
ஒரு மாணவனுக்கு ஆரம்பக் கல்வி தொடக்கம் அவனது இறுதிக்கல்வியாண்டு வரை தொழிற்கல்வியை மையப்படுத்தியே
கல்வியானது போதிக்கப்படுகின்றது. ஆரம்ப காலத்தைப் பொறுத்தவரையில் ஒழுக்க கல்வி முதன்மை பெற்றுக்கொண்டாலும் தற்காலத்தில் அறிவை மையப்படுத்திய தொழிற்கல்விக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
கல்வியானது போதிக்கப்படுகின்றது. ஆரம்ப காலத்தைப் பொறுத்தவரையில் ஒழுக்க கல்வி முதன்மை பெற்றுக்கொண்டாலும் தற்காலத்தில் அறிவை மையப்படுத்திய தொழிற்கல்விக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
ஒரு மாணவனது இரண்டாவது கற்பித்தல் களமாக காணப்படுகின்ற பாடசாலையிலேயே பல்வேறு அடிப்படையில் தொழிற்கல்வி வழங்கப்பட்டு வருகின்றது. அதாவது தரம் பதினொன்று மாணவர்களுக்கு தொடர்பாடலும் ஊடகவியற்கற்கையும் எனும் பாடமானது 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு பாடசாலையில் கற்பிக்கப்படுகின்றது.
பாடசாலையில் மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் முறைகள், கற்றல் அணுகுமுறைகள், பரீட்சைகள் என்பவற்றிற்கு தொழில் நுட்ப சாதனங்களுக்கு முதலிடம் கொடுக்கப்படுகின்றமை. அதுமட்டுமன்றி பாடசாலைகளில் இடைவெளி நேரங்களில் ஆசிரியர்கள்
மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களது தொழிலார்வம், ஆற்றல் என்பவற்றை அறிந்து அதற்கேற்றாற்போல் கற்பித்தலை நடாத்துகின்றனர்.
மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களது தொழிலார்வம், ஆற்றல் என்பவற்றை அறிந்து அதற்கேற்றாற்போல் கற்பித்தலை நடாத்துகின்றனர்.
மற்றும் இன்றைய தொழிற்சந்தையில் ஆங்கில மொழியின் தேவையினை அறிந்து பாடசாலைகளில் ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து கற்பிப்பது தொழிற்கல்வியின் பொருட்டே ஆகும். இன்று ஒரு சில பாடசாலைகளில் smart class முறையானது ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இச் செயற்பாடு மாணவர்களின்
தொழில் நுட்ப அறிவினை வளப்படுத்துவதற்கே ஆகும்.
இன்று கற்றலுக்கான கட்புல, செவிப்புல சாதனங்களையும் , தொழில் நுட்ப அடிப்படையில் கல்வி சாதனங்களையும் பரவலாக பயன்படுத்தும் முறை பாடசாலைகளில் காணப்பட்டு வருகின்றது. இது மாத்திரம் அன்றி பல்வேறு வகையான தொழிற் பயிற்சி முகாம்கள் இன்று பாடாலை ரீதியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இச் செயற்பாடுகள் பாடசாலை ரீதியாக மாணவர்களுக்கு தொழிற்க்கல்வியை போதிப்பதாக காணப்படுகின்றது. பாடசாலைகளில் இந்த தொழில் சார் கல்வியினை கற்பித்தல் எனும் செயற்பாட்டிற்கு அப்பால் சம்பவ பகுப்பாய்வு முறை, தொழில்சார் கண்காட்சிகள், செயல்வழி ஆய்வுகள், பரிசோதனை முறைகள் , தொழில் திறன் கருத்தரங்குகள் முதலிய செயற்பாடுகள் மூலமே மாணவர்கள் அதிகளவில் தொழில் கல்வியைப் பெற்றுக்கொள்கின்றனர்.
எவ்வாறு பல செயற்பாடுகள் பாடசாலை ரீதியாக மேற்கொள்ளப்பட்டாலும் இன்னும் பல புதிய நடவடிக்கை மூலம் தொழிற்கல்வியை மாணவர்கள் மத்தியில் சென்றடையச் செய்யலாம்.
அதாவது வாழ்க்கைத் தொழில் வழிகாட்டலை வழமையான பாடசாலையின் செயற்பாட்டின் பகுதியாக அமைக்க வேண்டும், தொழில் வாய்ப்புக்கள் பற்றிய தகவல்களை கொண்ட வாழ்க்கை தொழில் வழிகாட்டல் அலகு பாடத்தில் கொண்டு வருதல், தொழில் வழிகாட்டலுக்கென்று தனி ஆசிரியர் பாடசாலைகளில் நிறுவப்படுதல் வேண்டும்.
மிக முக்கியமாக தொழில் வழிகாட்டலும் மதித்துணையும் என்ற பகுதியை அனைத்து ஆசிரியர் கல்வி நிகழ்ச்சி திட்டங்களிலும் கட்டாய கூறாக மாற்றுதல், ஆசிரியர்களை தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், கல்வி சார் மென்பொருட்கள் மற்றும் online மூலமான கற்பித்தல் முறைகளுக்கு பயிற்றுவித்தல், பாடசாலை அதிபர்கள் மத்தியில் தகவல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தும் விழிப்புணர்வினை ஆரம்பித்தல், போதனா மொழியாக ஆங்கிலத்தினை கற்பித்தல் .அதுமட்டுமன்றி பாடசாலைகளின் தர உள்ளீடுகளுக்கான ஒதுக்கீடுகளில் தகவல் தொழில்நுட்ப சாதனங்களையும்,தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட கல்வி சார் வளங்களையும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தல்.
இவ்வாறான சில நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பாடசாலைகளில் தொழிற்கல்வியினை இன்னும் விருத்தியாக்கலாம். இந்த தொழிற்கல்வியானது பாடசாலை ரீதியாக மாணவர்களுக்கு சென்றடைவதனால் மாணவர்கள் சிறந்த தொரு பயனை அடையக்கூடியதாக இருக்கின்றது.

முக்கியமாக இடைவிலகல் மாணவர்களுக்கு இந்த தொழிற்கல்வியாது சிறந்ததொரு பயனை அளிக்கின்றது. எது எவ்வாறு இருப்பினும் ஆசிய நாடுகளின் தொழில்நுட்ப அறிவின் வரிசையில் இலங்கையானது பின்னடைவில் இருப்பதற்கு காரணம் உரிய முறையில் இத் தொழிற்கல்வி மாணவர்களைச் சென்றடையாமையே ஆகும் எனவே சிறந்த முறையில் தொழில்கல்வியினை கற்று எது நாட்டை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்ல எமது பங்களிப்பினையும் வழங்க வேண்டும்.
செல்வி பொ.யந்துஜா,
இரண்டாம் வருட சிறப்புக்கற்கை மாணவி,
கல்வி பிள்ளை நலத்துறை,
கிழக்குப்பல்கலைக் கழகம் இலங்கை.
செல்வி பொ.யந்துஜா,
இரண்டாம் வருட சிறப்புக்கற்கை மாணவி,
கல்வி பிள்ளை நலத்துறை,
கிழக்குப்பல்கலைக் கழகம் இலங்கை.