மட்டக்களப்பு மாவட்டத்தில் அழகுக்கலை தொழில் புரிவோருக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு !

(லியோன்)
அம்கோர் தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அழகுக்கலை தொழில் புரிவோருக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தொற்றினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் தொழில் பாதிப்புள்ளான மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அழகுக்கலை தொழில் புரிவோருக்கு ஒரு வார காலத்திற்கான உலர் உணவுப்பொதிகளை அம்கோர் தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனமானது வழங்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 150 அங்கத்தவர்களுக்கு இந்த உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களானால் இன்று மண்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ளவர்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வைபவ ரீதியாக வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிழ்வில் அம்கோர் நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் திரு யோ சிவயோகராஜன் திட்ட உத்தியோகத்தர் திரு அ. செல்வகுமார் மற்றும் கள உத்தியோகத்தர் செல்வி இ. கவிதாஷினி மற்றும் அழகுகலை அமைப்பின் தலைவர் திருமதி வனிதா செல்லப்பெருமாள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஏனையவர்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது பிரதேச செயலாளர் திரு பி வாசுதேவன் தலைமையில் உதவி பிரதேச செயலாளர் திருமதி லக்ஷனியா பிரசாந்தன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிகை அலங்கரிப்பாளர் அழகுக்கலை தொழில் புரிவோருவோருக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக இந்நிகழ்வு அம்கோர் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுகிறது.