மதரசாவில் தற்கொலை தாக்குதல் பாடம்: நீதிமன்றில் இருவர் சாட்சியம் !

(ஜே.எப்.காமிலா பேகம்)
ஈஸ்டர் ஞாயிறு தினத் தாக்குதல்களை அடுத்து , கைது செய்யப்பட்ட 17 வயது இரண்டு இளைஞர்கள் இன்று நீதிமன்றில் , மதரசா பள்ளிக்கூடங்களில் ஆயுதப் பயிற்சி சார்ந்த கற்றல்கள் இடம்பெற்றதாக சாட்சியம் அளித்துள்ளனர்.

கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் ரங்க திசாநாயக்க முன்பாக, குறித்த இருவரும் இரகசிய பொலிஸாரினால் ஆஜர் செய்யப்பட்டனர்.

“அம்பாறையில் மதரசா பள்ளிக்கூடம் ஒன்று தீவிரவாதி ஸஹ்ரானின் சகோதரன் ரில்வானினால் நடத்தப்பட்டது. சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், அதன் அதிபராக செயற்பட்டார். அங்கே தற்கொலை தாக்குதல்கள் பற்றி கற்பிக்கப்பட்டது. ஈஸ்டர் தாக்குதல்களை நடத்திய பிரதான நபர்கள் அங்கே கற்பித்தலில் ஈடுபட்டிருந்தனர்” என்று சாட்சியத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.