(ஷமி மண்டூர்)
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விபுலானந்தா வீதி கோயில்போரதீவைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் (27) தனக்குத்தானே களுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதன்கிழமை (13) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது
குறித்த யுவதியின் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதாகவும் இந்நிலையில் குறித்த யுவதி வீட்டில் யாரும் இல்லாத நிலையில்; தனக்கு தானே அவரின் வீட்டில் வளையில் களுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக காணப்பட்டார்.
களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக திடீர் மரணவிசாரணை அதிகாரி; சிதம்பரப்பிள்ளை-ஜீவரெத்தினம் அவர்கள சடலம் வைக்கப்பட்டிருந்த களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையின் பிரேத அறைக்கு சென்று பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை உடற்கூற்று பரிசோதனைக்குட்படுத்தும் படி தடயவியல் பொலிஸார் மற்றும் களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













