இடைநிறுத்தப்பட்டுள்ள சமுர்த்தி வங்கி கணனி உதவியாளர்களின் கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி மகஜர் ஒன்று மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது
குறித்த விடயம் தொடர்பாக தெரியவருவதாவது,
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் கடிதத்திற்கு அமைவாக சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிகளுக்கு கணனி உதவியாளர்களாக நாடளாவிய ரீதியில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது .
இதற்கான நேர்முக பரீட்சசைகள் நடாத்தப்பட்டு பின் செயன்முறை பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 59 கணனி உதவியாளர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கான மூன்று மாத கால பயிற்சிகள் வழங்கப்பட்டு, அதற்கான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளன .
இந்நிலையில் கடந்த 2019 12.12. ஆம் திகதி வழங்கப்பட்ட கடிதற்கு அமைய 2020.06.17 ஆம் திகதி வரையான 7 மாதங்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டு சமுர்த்தி வங்கி கணனி உதவியாளர்களாக சேவையினை ஆற்றிவருகின்றனர்
இவ்வாறு 7 மாதகாலமாக கொடுப்பனவுகள் இன்றி மன உளைச்சலுக்குள்ளான நிலையில் கடமையாற்றி வரும் சமுர்த்தி வங்கி கணனி உதவியாளர்களின் கொடுப்பனவுகளை வழங்கி, இவர்களுக்கான நிரந்தர நியமனத்தையும் வழங்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி வங்கி கணனி உதவியாளர்களினால் மகஜர் ஒன்றினை மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி ஸ்ரீகாந்த்திடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்

மேலும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி ஸ்ரீகாந்த்திடம் கையளித்துள்ள மகஜர் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துக்களை வழங்கி இருந்தனர்.