அனைத்து சிறை அதிகாரிகளும் கொழும்புக்கு அழைப்பு; நட்சத்திர ஹோட்டலில் மாநாடு!

 (ஜே.எப்.காமிலா பேகம்)
நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளினதும் அதிகாரிகள், கொழும்புக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார்.


கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் இன்று காலை முதல் விஷேட மாநாடும் நடைபெற்று வருகிறது.

பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் சிறைச்சாலைகளில் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள், கைதிகளை கட்டுப்படுத்தல் உட்பட பல விடயங்கள் பேசப்படுகின்றன.