(ரீ.எல்.ஜவ்பர்கான்)
உலகின் முதல் தமிழ் போராசியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 73வது சிரார்த்த தினமும் கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையின் 73வது தாபகர் தினமும் இன்று காலை உணர்வு பூர்வமாக சுவாமி விபுலானந்தர் மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள சுவாமியின் சமாதியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு ' இராமகிருஸ்ண மிசன் தலைவர் 'மத் சுவாமி நீலமாதமானந்தாஜீ தலைமையில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வுகளில் சுவாமி விபுலானந்தா மணிவிழாச்சபை தலைவர் கே.பாஸ்கரன், கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை அதிபர் ரீ.யசோதரன், உட்பட பல முக்கிஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
சுவாமியின் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் சுவாமியின் வெள்ளை நிற மல்லிகையோ பாடலும் இசைக்கப்பட்டது.
கிழக்கில் பல கல்விமான்களை உருவாக்கிய மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையை சுவாமி விபுலானந்தரே ஸ்தாபித்ததுடன் சைவத்திற்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றியவர் சுவாமி விபுலானந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
























