சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் வவுணதீவு விஷேட அதிரடி படையினரால் கைது


(ஏறாவூர் நிருபர் எம்.ஜி.ஏ நாஸர்)
மட்டக்களப்பு - வந்தாறுமூலை சிவப்பு பாலத்தடி பிரதேசத்தில் சட்டவிரோமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்துபேர் வவுணதீவு விசேட
அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மணல் ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஐந்து உழவு இயந்திரங்களும்
கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் ஏறாவூர்ப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்
உழவு இயந்திரங்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி
முன்னிலையில் ஆஜர்செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிரதேசத்தில் மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் இவர்களிடம் இருக்கவில்லையென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.