நாளை மட்டக்களப்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு
வவுனதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இடம்பெறவுள்ள பராமரிப்பு வேலை
காரணமாக நாளை (15.07.2020) காலை 04:00 மணி தொடக்கம் இரவு 10:00 மணி வரை மட்டக்களப்பு நகர், இருதயபுரம், ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை, காத்தான்குடி, ஆரையம்பதி, வவுனதீவு மற்றும் கொக்கட்டிசோலை போன்ற பிரதேசங்களில் நீர் வழங்கல் தடைப்படும் என்பதனால் பாவனையாளர்கள் தங்களுக்கு தேவையான நீரினை இன்று இரவு 10:00 மணிக்கு முன்னர் பெற்று சேகரித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகின்றீர்கள்.
அத்துடன், இன்று இரவு 10:00 மணிக்கு பின்னரான நேரத்தில் குறைந்த அழுத்தத்தில் நீர் பெறகூடியதாக இருப்பினும் அவ்வாறு பெறுதலை முற்றுமுழுதாக தவிர்த்து நீர் குழாய்களின் அழுத்தங்களை பேணுவதற்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
பிராந்திய முகாமையாளர்
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை
மட்டக்களப்பு













