அரச உத்தியோகத்தர்கள் சிந்தித்து செயற்படுவதன் மூலம் ஆளுமை மிக்க தலைமையை தேர்ந்தெடுக்க முடியும் - மா.உதயகுமார்

அனைவருக்கும் வணக்கம்

தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பிக்கின்றது அனைவரும் அறிந்ததே! இச்சந்தர்ப்பத்தில் நான் அரச ஊழியர்களை தேர்தல் விதிமுறைக்கு கட்டுப்பட்டு அவர்களது அலுவலகங்களில் சந்திப்பதை தவிர்த்திருந்தேன். தபால் வழி ஊடாகவும் முகப்புத்தக காணொளி ஊடாகவும் தொடர்பை ஏற்படுத்தியிருந்தேன். எனினும் சில அரச ஊழியர்களுக்கு எனது தபால் தவிர்க்க முடியாத காரணங்களால் கிடைக்கப்பெறவில்லை என அறிய கிடைத்தது. எனவே இந்த பொதுவான செய்தி மூலம் அவர்களுக்கு எனது வேண்டுகோளை முன்வைக்கின்றேன்.

சிந்தித்து தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ளும் திறனுடைய நீங்கள் உங்களது வாக்குகளை சிறந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம் மட்டக்களப்பில் ஆளுமை மிக்க தலைமைகளை தேர்ந்தெடுப்பீர்கள் என்ற திடமான நம்பிக்கை எனக்குண்டு.
உங்கள் வாக்கினை வீட்டுச்சின்னத்திற்கும் 🏠 இலக்கம் 6️⃣ க்கும் இடுவதன் மூலம் எனது வெற்றிக்கு பங்காற்றலாம்.

மிக்க நன்றி!
உங்களில் ஒருவன்
மாணிக்கம் உதயகுமார்
(முன்னாள் அரசாங்க அதிபர்)
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர்