தேர்தல் விஞ்ஞாபனம் விரைவில் வெளியிடப்படும் - இரா.சம்பந்தன்

தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். மாற்றமடைந்த அரசியல் பிரச்சினைகள் காரணமாக தீர்வை எட்டமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

மாறிமாறி ஆட்சிபுரிந்த அரசாங்கங்கள், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில், இழுத்தடிப்பையே மேற்கொண்டதாக இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் சுபீட்சமான வாழ வேண்டும். இதுவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். விரைவில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படும்.

அதில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் குறிப்பிடப்படும். வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தமது வாக்குகள் சிதறாத வண்ணம், தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.