வேன் ஒன்றில் வந்த இனம் தெரியாத குழுவினரால் 20 வயதான யுவதி கடத்தப்பட்டார்!


யாழ்ப்பாணம் நீர்வேலி வடக்கில் வெள்ளை வேனில் வந்த இனம் தெரியாத குழுவினரால் யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவம் நேற்று (09) இரவு இடம்பெற்றுள்ளது.

நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு வெள்ளை வேனில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.

பின்னர் அங்கிருந்த 20 வயதாக யுவதியை பலாத்காரமாக கடத்திச் சென்றுள்ளதாக உறவினர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.