(சித்தா)
கமு/கமு/கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றிய திருமதி மகேஸ்வரி – மெய்யழகன் 30 வருட கால ஆசிரியப் பணியில் இருந்து இன்று (21.08.2020) ஓய்வு பெறுகின்றார்.
திருமதி மகேஸ்வரி – மெய்யழகன் ஆரம்பக் கல்வியினை சம்மாந்துறை கோரக்கர் தமிழ் வித்தியாலயத்திலும் இரண்டாம் நிலை, உயர்தரக் கல்வியினை சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் கற்றார். பாடசாலைக் காலத்தில் பல்வேறு இலக்கியம் சார்ந்த போட்டிகளில் ஈடுபாடு காட்டினார். 1985 ஆம் ஆண்டு எழுதுவினைஞராக முதல் நியமனத்தைப் பெற்றுக் கொண்டு மல்வத்தை விவசாய விஸ்த்தரிப்பு நிலையத்தில பணியினைத் தொடர்ந்தார். இப் பணியில் சிறப்பான சேவையினை 5 வருட காலம் மேற் கொண்ட இவர் ஆசிரியப் பணியில் நாட்டம் கொண்டு 1990 ஆம் ஆண்டு ஆசிரியப் பணியில் கமு/ மல்வத்தை விபுலாநந்த வித்தியாலயத்தில் காலடியெடுத்து வைத்தார். பின்னர் கமு/கமு/கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் தமிழ் பாட ஆசிரியராக ஓய்வு பெறும் வரை பணியாற்றினார்.
திருமதி மகேஸ்வரி – மெய்யழகன் அவர்கள் இயல்பாகவே தமிழ் மொழியில் நாட்டம் கொண்டவராகவும், கலைமாணி, கல்வி மாணி ஆகிய பட்டங்களைப் பெற்று அதனூடாக பெற்றுக் கொண்ட அறிவினையும் பயன்படுத்தி மாணவர்களுக்கு தமிழ் பாடத்தினை க.பொ.த.சாதாரணம், க.பொ.த.உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு இலகு நடையில் கற்பித்து மாணவர்களின் அடைவினை உயர்த்தினார். இவரிடம் மாணவர்கள் தமிழை விரும்பிக் கற்கும் வகையில் உளவியல் சார்ந்து மாணவர்களை அணுகி தன்னலம் கருதாது பாடத்தினைக் கற்பிப்பதில் சிறப்பு வாய்ந்தவராகவும் காணப்பட்டார். இதன் காரணமாக அதிக மாணவர்கள் தமிழ் பாடத்தில் அதிவிஷேட சித்திகளைப் பெற்றுக் கொண்டதுடன் பல்கலைக் கழக அனுமதியினைப் பெறுவதற்கும் உறுதுணையாக இருந்தார்.
அத்துடன் அகில இலங்கைத் தமிழ் மொழித் தினப் போட்டியில் மாணவர்களின் பங்களிப்பினை அதிகரிக்கச் செய்வது மாத்திரமன்றி தேசிய மட்டத்திலும் கமு/கமு/கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை சாதனை படைப்பதற்காக உழைத்தார். இது மாத்திரமன்றி பாடசாலையின் முகாமைத்துவக் குழுவின் உறுப்பினராக இருந்து பாடசாலை முகாமைத்துவத்திற்குப் பெரும் பங்காற்றி பாடசாலை சிறந்த முகாமையுடன் திகழ்வதற்கும் காரணமாக இருந்தார்.