காத்தான்குடி மர ஆலையொன்றில் தீ விபத்து: பல லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்

மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேசத்தில் மர ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து தீக்கிரையாகியுள்ளன.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
இன்று(26) அதிகாலை 4.00 மணிக்கு தீ பரவியுள்ளது. இதனை அடுத்து மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவு, காவல்துறை மற்றும் பொது மக்கள் இணைந்து தீயினை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ பரவலுக்கான காரணம் அறியப்படாததுடன் சம்பவம் தொடர்பில் ம் காத்தான்குடி காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.