வருடா வருடம் நூற்றுக்கணக்கான முருகபக்தர்கள் ஒன்று திரண்டு படையெடுக்கும் வேல் பவனியானது, இம்முறை பெருந்தொற்றுக் காரணமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து 50 பக்தர்களுடன் வேல் பவனி ஆரப்பமாகியது.
நேற்று(20) வியாழக்கிழமை சம்பூர் சூடைக்குடா மத்தளமலை குன்றத்தூர் குமரன் ஆலயத்தில் முருக பக்தர்கள் ஒன்று கூடினர்.
வருடாவருடம் வேல்பவனியை ஆரம்பிக்கும் தென்கயிலை ஆதீனத்தின் முதற்குரு தவத்திரு அகத்தியர் அடிகளார் இம்முறையும் வழக்கம் போல் குன்றத்தூர் குமரன் ஆலயத்திலிருந்து வேலைத்தாங்கி வேல்பவனியை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் தென்கயிலை ஆதீனத்தின் இளையபட்டம் தவத்திரு திரமூலர் தம்பிரான் அவர்கள் நந்திக்கொடி ஏற்றி வைத்தார்.
இன்று 20 08 2020 வியாழக்கிழமை ஆரம்பித்த வேல் பவனியானது, 29 08 2020 சனிக்கிழமை வெருகல் அருள்மிகு சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தைச் சென்றடையும். வேல் பவனியின் போது , 49 ஆலயங்களை தரிசித்தபடி வேலாயுதனார் பவனி செல்கின்றார். பவனி ஆரம்பத்தில் வேலனைப் பற்றிய கோலாட்டப் பாடல்களுடன் முருக பக்தர்களான பெண்கள் குதூகலத்துடன் கோலாட்டம் ஆடினார்கள்.
தொடர்ந்து வழியெங்கும் தரிசிக்கும் ஆலயங்களில் சித்திர வேலாயுதர் காதல் பாடலும் கந்தபுராணப் பாடலும் பஜனையாக பாடி பவனி தொடரும்.
மேற்படி வேல்பவனி நிகழ்வில் தென்கயிலை ஆதீனத்தின் தலைமை அருட்சுனைஞரும், அகில இலங்கை சைவத்தமிழ் அறக்கட்டளையின் தலைமை அருட்சுனைஞருமான உயிரொளி சிவம் பிரதாபனார், தென்கயிலை ஆதீனம் - மலையகம் சார்பில் திரு. திவாகர் ஐயா (சிவனருட்சபை மலையக ஒருங்கிணைப்பாளர்) மற்றும் திரு.பரமசிவம் ஐயாவும், வருகை தந்து கலந்து கொண்டனர்.