சிறிய தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு நடாத்தும் “மட்டு முயற்சியாண்மை" பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சி இன்று
மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள
சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு “மட்டு
முயற்சியாண்மை“ எனும் தொனிப்பொருளில் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் முன்னெடுக்கப்படுகின்ற
திட்டத்தின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலக உள்ளூர் உற்பத்தி
பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சி; மட்டக்களப்பு
மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
கண்காட்சியும் விற்பனையும் இன்று மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி
பத்மராஜா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கண்காட்சி மற்றும்
விற்பனை நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுகளில்
உள்ள சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களின் தயாரிப்புகள், கைவினை பொருட்கள், உணவு உற்பத்திகள், சிற்பங்கள், மற்றும் கைத்தறி உற்பத்தி பொருட்கள், என பல்வேறு உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தபட்டுள்ளதுடன் விற்பனையும் செய்யப்பட்டன
மாவட்ட அரசாங்க அதிபரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட “மட்டு
முயற்சியாண்மை" பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சி நிகழ்வில்
மாவட்ட மேலதிக மாவட்ட செயலக உதவி மாட்ட செயலாளர் எ.நவேஸ்வரன் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்
இதேவேளை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொதுமக்களின் நலன் கருதி பிறப்பு அத்தாட்சி
சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய செயல் திட்டம் ஒன்றும்
மாவட்ட அரசாங்க அதிபரினால் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்
இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.































