விளாவெட்டுவான் குளக்கட்டடி சிறி நாகலிங்கேஸ்வர ஆலய வருடாந்த ஆண்டு சடங்கு

(எரிக்)
விளாவெட்டுவான் குளக்கட்டடி சிறி நாகலிங்கேஸ்வர ஆலய வருடாந்த ஆண்டு சடங்கு 03.07.2020 அன்று பி.ப 3.00 மணியளவில் ஆரம்பமாகியது.

இந் நிகழ்வு இவ் ஆலய பிரதம குருக்கள் சிறி நா. நிசாந் குருக்கள் தலைமையில் ஆரம்பமானது. உதவிக் குருக்களாக சிறி ப.போசித் குருக்களும், அவர்களுக்கு உதவியாக பூசாரிகளும் கலந்து கொண்டு சடங்கினை சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில நெல் குத்தும் நிகழ்வும் , தெய்வங்கள் வாக்கு சொல்லும் நிகழ்வும் நடை பெற்றது. இந் நிகழ்வானது அடுத்த நாள் காலை 6.00 மணியளவில் சடங்கு நிறைவடைந்தது.

இந் நிகழ்விற்கு ஏராளமான பக்த கோடிகள் கலந்து சிறப்பித்தது ஒரு முக்கிய அம்சமாகும்.