மட்டக்களப்பு - திருப்பெருந்துறை 1 ஆம் குறுக்கு வீதியினை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பம்
(ஜனா)
மக்களின் வரிப்பணத்தினை மக்களுக்கே கொண்டு செல்வோம் எனும் கருத்திட்டத்தின் கீழ் திருப்பெருந்துறை முதலாம் குறுக்கு வீதியினை புனரமைக்கும் பணிகள் இன்று (16) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாநகர சபைக்கு மக்களினால் செலுத்தப்பட்ட வரிப்பணத்தினை முழுமையாக மக்களுக்கே கொண்டு செல்ல வேண்டும் எனும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்பாடுகளின் ஊடாக 19ஆம் வட்டார உறுப்பினர் மா.சண்முகலிங்கம் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க இவ் வீதியானது கொங்றிட் வீதியாக செப்பனிடப்படவுள்ளது.
மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான பாதீட்டு நிதி ஒதுக்கீட்டின் ஊடாக குறித்த வீதியின் அபிவிருத்திப் பணிகள் 100 மீற்றர் நீளத்தில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.













