மட்/பட்/களுதாவளை விக்ணேஸ்வரா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிய திருமதி தவராசா- குணலெட்சுமி 28 வருட கால ஆசிரியப் பணியில் 09.09.2020 இருந்து ஓய்வு பெறுகின்றார்.
திருமதி தவராசா- குணலெட்சுமி அவர்கள் 1992 ஆம் ஆண்டு ஆசிரியராக மட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயத்தில் பணியை ஆரம்பித்து மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாயலயம், மட்/பட்/திருப்பழுகாமம் விபுலாநந்தா வித்தியாலயம், மட்/பட்/களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் கடமையாற்றி ஓய்வு பெறும் வரை மட்/பட்/களுதாவளை விக்ணேஸ்வரா வித்தியாலயத்தில் கடமையாற்றினார். பாடசாலைக் காலத்தில் பல்வேறு இலக்கியம் சார்ந்த போட்டிகளில் ஈடுபாடு காட்டிய இவர் ஆசிரியப் பணியிலும் தன்னிடம் கல்வி கற்ற மாணவர்களையும் இலக்கியத் துறையில் நாட்டமுறச் செய்தார். இந்த வகையில் அகில இலங்கைத் தமிழ் தினப் போட்டி, சிறுவர் அரங்கு, திருக்குறள் மனனப் போட்டி, நூறு சதுரக் கணித்தல் போட்டி என்பவற்றில் மாணவர்களை பயிற்றுவித்து போட்டிகளில் வெற்றியீட்ட உழைத்தார். இதன் காரணமாக மாணவர்கள் தேசியமட்டம் வரை சென்று வெற்றிபெற்றமை இதற்கான சான்றாகும்.
மட்/பட்/களுதாவளை விக்ணேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் போன்றோர் இவரின் சேவையைப் பாராட்டி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.













