மட்டக்களப்பில் வீடொன்றில் தீ விபத்து!


(லியோன்)
மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் வீடு ஒன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தினை மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு படை பிரிவு மற்றும் மின்சார சபையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மாநகர சபை தீயணைப்பு படைப்பிரிவு மற்றும் மின்சார சபை உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு குமாரத்தான் கோவில் வீதி மாமாங்கம் பகுதியில் நேற்று மாலை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீயினை அவதானித்த அப்பகுதி மக்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினர் மற்றும் மின்சார சபை உத்தியோகத்தர்களினால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் .

குறித்த தீ விபத்தானது வீட்டில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீ விபத்தில் தொலைகாட்சி சாதனம் உட்பட வீட்டு உபகரணங்கள் பல எரிந்து சேதமாகியுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்திருந்தார்.