(ஏறாவூர் நிருபர்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் விசேட பணிப்புரையின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்டுள்ள சப்பிரிகமக் தேசிய வேலைத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு ஏறாவூர்ப்பிரதேசத்தில் ஒரு கோடி ரூபா நிதியில் ஆறு வீதிகளுக்கான வடிகால் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இப்பணியினை ஆரம்பம் செய்தார்.
நகர சபை முதல்வர் ஐ. அப்துல் வாசித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் முதல்வர்களான ஏ.அப்துல் நாஸர் மற்றும் எம்ஐ.தஸ்லிம், உறுப்பினர் எஸ்.எம். றியால் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
ஏறாவூர் புன்னக்குடாவீதியின் 3 ஆம் குறுக்கு, பெண் பாடசாலை வீதி, ஓடாவியார் வீதி, பள்ளியடி வீதி, றகுமானியா புதிய வீதி, பெண்சந்தை மற்றும் குறுக்கு வீதி ஆகிய பாதைகளில் வடிகான்கள் அமைக்கப்படுகின்றன.
எதிர்வரும் டிசம்பர் மாத மாரி மழைக்கு முன்னதாக இவ்வேலைத்திட்டம் பூர்த்தி செய்யப்படவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















