
வெளிநாடுகளில் பட்டப்படிப்பினை மேற்கொண்டு பட்டம் பெற்ற மாணவர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பட்டதாரிகளிடம் இருந்து 4,100 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய குறித்த பட்டதாரிகளுக்கு பின்தங்கிய பகுதிகளில் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், தகவல் தொழில்நுட்பம் போன்ற பாடங்களை கற்பித்தல் பணிகளுக்காக இணைத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் எதிர்காலத்தில் அவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் நடைப்பெறும்.












