(எம்.என்.எம்.அப்ராஸ்)
விவசாயத் திணைகளத்தின் அம்பாரை மாவட்ட மாகாண இடைப் பிரதேசங்களில் செப்டம்பர் 07 முதல் 12 வரையான காலப்பகுதியில் விஷேட விவசாய ஊக்குவிப்பு வாரம்-2020 அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.அஹமட் சனீர்
அவர்களின் வழிகாட்டலில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதற்கமைய கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் ஏற்பாட்டில்
விவசாய விரிவாக்கல் நிலைய போதனாசிரியர் திருமதி எஸ்.கிருத்திகா தலைமையில் விவசாய ஊக்குவிப்பு நடவடிக்கைகள் விரிவாக்கல் நிலையத்தில் நேற்று முன்தினம்(07) இடம்பெற்றது.
இதன் போது வீட்டு தோட்ட செய்கையில் ஈடுபடுவோருக்கு தோட்ட பயிர் செய்கையை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய ஆலோசனைகள்
வழங்கப்பட்டதுடன் சிறந்த விவசாய நடைமுறைக்காக கல்முனை விவசாய விரிவாக்கல் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட கே.கணேசமூர்த்தி அவர்களுக்கு விவசாய பாதுகாப்பு உபகரணம் இலவசமாக வழங்கப்பட்டதுடன் பயிர் செய்கையின் போது பயனாளிகளுக்கு ஏற்படும் பிரச்சினைளுக்கான தீர்வுகளும் வழங்கப்பட்டன.
இதன் போது பயிர் கன்றுகள், விதைகள், விவசாய ஆலோசனையடங்கிய
துண்டுபிரசுரம் என்பன வீட்டு தோட்ட பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் தொழில்நுட்ப உதவியலாளார் கே.குகழேந்தினி, விவசாய போதானாசிரியர் என்.யோகலக்ஷ்மி மற்றும் பயனாளர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.




















