(லியோன்)
மட்டக்களப்பு லியோ கழகத்தினால் நிர்மாணிக்கப்பட்ட மலசலகூடம் கையளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு வவுணதீவில் நடைபெற்றது.
மட்டக்களப்பு லியோ கழகத்தினால் நிர்மாணிக்கப்பட்ட மலசலகூடம் கையளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு வவுணதீவில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் லியோ கழகமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் மற்றும் பெண்கள் தலைமைதாங்கு குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல வாழ்வாதார சுயதொழில் ஊக்குவிப்பு திட்டங்களையும் அதனுடன் இணைந்ததாக அவர்களுக்கான அடிப்படை அத்தியாவசிய சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வவுணதீவு கிராம சேவை பிரிவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்கள் மற்றும் பெண்கள் தலைமைதாங்கு குடும்ப பெண்களின் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் சிறு வியாபார கடைகளும், மலசலகூட வசதிகள் இல்லாத குடும்பங்களுக்கு மலசலகூடங்களை நிர்மாணித்து வழங்கி வருகின்றனர்.
இதற்கு அமைய மலசலகூடம் வசதி இல்லாத குடும்பத்திற்கான மலசலகூடம் நிர்மாணிக்கப்பட்டு மட்டக்களப்பு லியோ கழகத்தின் தலைவர் டி.இளங்கீரன் தலைமையில் இன்று கையளிக்கப்பட்டது.












.jpg)







