"கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளையும் தமிழ் மொழி வாழ்த்துடன் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" - வியாழேந்திரன்

(வரதன்)
கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளிலும் தமிழ் மொழி வாழ்த்துடன் பாடசாலையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 46 இந்து ஆலயங்களை புனரமைப்பு செய்வதற்கான நிதியுதவி பிரதம மந்திரி அவர்களின் கலாச்சார அமைச்சினால் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு நாவற்குடா இந்து சமய காலாச்சார பேரவை மண்டபத்தில் மாவட்ட இந்து சமய காலாச்சார உத்தியோகஸ்தர் ஏ.குணநாயகம் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
பிரதம மந்திரி அவர்கள் எமது வேண்டுதலை ஏற்று துரிதமாக இந்து நிதியுதவி வழங்கியமைக்கு எமது நன்றியை தெரிவிப்பதோடு இவ் பணிகளை முன்னெடுக்க அங்கு எமது இருப்பை பாதுகாக்க வேண்டுமென்றார்.

இந் நிகழ்வில் 46 லட்சம் ருபா நிதியுதவி ஆலயங்களை புனரமைப்பு செய்வதற்காக  வழங்கி வைக்கப்பட்டது. மேலும் இவை தொடர்ச்சியாக கட்டம் கட்டமாக வழங்கி வைக்கப்படவுள்ளது. 

இவ் நிகழ்வில் மாவட்ட இந்து சமய கலாச்சார திணைக்கள உயர் அதிகாரிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட இந்து ஆலயங்களின் அறங்காவலர் சபையினர் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.